மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் முறைமை இன்று அறிவிக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய இன்று முதல் 30 இற்கும் மேற்பட்ட மருந்துகளை மக்கள் குறைந்த விலைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் சேனக பிபிலேயின் மருந்து கொள்கை திட்டத்திற்கமையவே குறித்த இந்த விலை குறைப்பு இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.