பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வதாக வரவு - செலவுத்திட்டம் அமையவேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 05:59 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாகப் பெருமளவானோர் தமது தொழில்வாய்ப்புக்களையும் வருமான மார்க்கங்களையும் இழந்திருப்பதுடன் அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களும் சம்பளக்குறைப்பு, மேலதிக கொடுப்பனவு நிறுத்தம் போன்றவற்றால் வெகுவாகப் பதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகி, நிவாரணங்களையும் சலுகைகளையும் எதிர்பார்த்துக்காத்திருக்கும் மக்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக அவற்றை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் சனிக்கிழமை (6) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாட்டின் அனைத்துத்துறைகளையும் உரியவாறு நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளமையினை அவதானிக்கமுடிகின்றது. 

அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ள நிலையில், சடுதியாக உயர்வடைந்துள்ள வாழ்க்கைச்செலவை எதிர்கொள்ளமுடியாமல் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

மறுபுறம் உரத்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் தேயிலைப்பயிர்ச்செய்கையாளர்களும் வீதிகளில் இறங்கிப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் அவர்கள் விரும்பியவாறு தீர்மானிப்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது.

அதேபோன்று கடந்த தேர்தல்களின்போது நாட்டின் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.

ஆனால் அவ்வாக்குறுதிகள் எவையும் தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படாதநிலையில், தொடர்ச்சியாக அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவை கையாள்வதில் அவர்களும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

ஆகவே அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான  வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். 

அதுமாத்திரமன்றி அரசசேவையில் உள்வாங்கப்பட்ட மேலதிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாகப் பெருமளவானோர் தமது தொழில்வாய்ப்புக்களையும் வருமான மார்க்கங்களையும் இழந்தனர். அதுமாத்திரமன்றி பெருமளவான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளக்குறைப்பைச் செய்ததுடன் மேலதிக கொடுப்பனவுகளையும் நிறுத்தியிருந்தன.

ஆகவே கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகி, நிவாரணங்களையும் சலுகைகளையும் எதிர்பார்த்துக்காத்திருக்கும் மக்களுக்கு அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக அவற்றை வழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

இன்றளவிலே அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் இலங்கைக் கம்யூனிஸக்கட்சியின் பொதுச்செயலாளர் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பகிரங்கமாக விமர்சிக்கின்றார்.

அதுமாத்திரமன்றி எமது நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னரொருபோதும் தற்போதைய அரசாங்கத்தைப்போன்ற மிகமோசமான அரசாங்கம் ஆட்சியில் இருந்ததில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறுகின்றார். 

தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வாக்களிக்குமாறுகோரி மக்களை ஏமாற்றியவர்கள்தான் இப்போது மேற்கண்டவாறு விமர்சிக்கின்றார்கள்.

இவற்றிலிருந்து நாடு மிகமோசமான சீரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளமையினைப் புரிந்துகொள்ளமுடிகின்றது என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10