பயணப் பொதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : மட்டக்குளியைச் சேர்ந்த கணவன், மனைவி கைது ! சடலத்தை கொண்டுசென்று வாகனமும் மீட்பு !

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 03:09 PM
image

சப்புகஸ்கந்தவில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் மட்டக்குளி, சமித்புரவைச் சேர்ந்த 36 வயதான கணவன், மனைவி ஆகியோரே  இவ்வாறு களனி வலய குற்ற விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பெண்ணின் சடலத்தை ஏற்றிச்சென்றதாக கருதப்படும் வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை   சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த குப்பைகொட்டுமிடத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாயான, 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ்  என அவரது கணவரும் 2 பிள்ளைகளும் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலத்தை நேற்று பார்வையிட்டதன் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47