நுகர்வோரின் நலன் கருதியே கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினோம் ; நியாயமற்ற வகையில் விலை அதிகரிப்பிற்கு இடமளிக்க முடியாது - லசந்த அழகியவன்ன

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 12:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை சந்தையில் தடையின்றி பெற வேண்டும் என்பதற்காகவே அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொருட்களின் விலை சற்று அதிகரிக்கப்படும். இருப்பினும் நியாயமற்ற வகையில் விலை அதிகரிப்பிற்கு இடமளிக்க முடியாது என கூட்டுறவு சேவைகள்,சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதற்கான உண்மை காரணியை மக்கள் நன்கு அறிவார்கள். நுகர்வோர் எதிர்க்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காண கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரிசி, சீனி உள்ளிட்ட பிரதான 8 அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கொவிட் - 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகளாவிய மட்ட பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது.

கப்பல் போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பின் காரணமாக பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.உலகம் தற்போது எதிர்க் கொண்டுள்ள நெருக்கடியான நிலையை நாட்டு மக்களுக்கு புதிதாக தெளிவுப்படுத்த வேண்டியதில்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு மாத்திரம் அப்பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள  முடியாது.

அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி நீக்கப்பட்டதற்கு அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.தற்போ நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 20 முறை காலத்தின் தேவைக்கு அமைய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமாயினை தொடர்ந்து பேண்வது சாத்தியமற்றது.

நுகர்வோர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற வேண்டும்.என்பதற்காகவே தற்போது அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.இதனால் விலை சற்று அதிகரிக்கப்படும்.இருப்பினும் நியாயமற்ற வகையில் அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரிசி,சீனி,சமையல் எரிவாயு,சீமெந்து ஆகிய பொருட்களின் பற்றாக்குறை காணப்படுகிறது.இவற்றிற்கு எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 25சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவிற்கு லங்கா சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டில் தற்போது சீமெந்திற்கான தட்டுப்பாடு பெருமளவில் காணப்படுகிறது அதற்கும் எதிர்வரும் வாரம் தீர்வு பெற்றுக் கொள்ளப்படும். சமையல் எரிவாயு தட்டுப்பாடு கட்டம் கட்டமாக குறைவடைகிறது.எதிர்வரும் வாரமளவில் புதிய சமையல் எரிவாயு சிலின்டரை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

நுகர்வோருக்கு சாதகமாக அமைய வேண்டும்.என்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவுப் பெறும் நிலையில் உள்ளது.

ஆகவே வெகுவிரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் சட்டத்தின் ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். தற்போதைய சூழலில் நுகர்வோர் எதிர்க் கொண்டுள்ள அசௌகரியங்களை ஏற்றுக் கொள்கிறோம்.அவற்றிற்கு விரைவில் தீர்வு காண கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08