முத்துராஜவல வர்த்தமானியை இரத்து செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்க - அருட் தந்தை சாந்த சாகர ஹெட்டியாரச்சி

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 11:16 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

முத்துராஜவல அபய பூமி நிலப்பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறும், எமது மீனவர்களின் வாழ்வாதரத்தையும் தேசிய வளங்களையும் பாதுகாக்கும்படி அருட் தந்தை சாந்த சாகர ஹெட்டியாரச்சி அரசங்கத்திடம் வலியுறுத்தினார்.

வனஜீவராசிகள் அமைச்சின் கீழிருந்த முத்துராஜவெல நிலப்பகுதி மற்றும் நீர்கொழும்பு களப்பு வரையிலான சகல கிராமங்களையும் திடீரென நாகரீக அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியன்று வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடை அச்ச சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர்களான அன்தனி ஜயகொடி மற்றும் மெக்ஸ்வல் சில்வா ஆகிய ஆண்டகைகளின் தலைமையில் போப்பிட்டி, புனித நிக்கலொஸ் தேவாலய வளாகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் ‍மேலும் கூறுகையில்,

"போப்பிட்டியவிலுள்ள 150 ஏக்கர் காணி கொரிய நிறுவனமொன்று விற்கப்பட்டுள்ளது. அவர்கள், தமது அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும்போது மீனவத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்களும், அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள். எமது மீனவர்களுக்கு 4,5 ஆண்களுக்கு கடலுக்கு செல்ல முடியாது போகும் நிலை ஏற்படும்.

இது தவிர, அவர்கள் பொழுபோக்கு மைதானமொன்றை அமைப்பதற்காக போப்பிட்டிய பகுதியில் 100 ஏக்கர் காணியை பெறவுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலங்களை அவர்கள் எங்கிருந்து பெறப் போகிறார்கள். மக்களின் குடியிருப்புகளையா பெறப்போகிறார்கள்? மேலும்,

அவர்கள் கெப்புன்கொட கடற்பரப்பிலிருந்தே மணலை எடுக்கவுள்ளனர்.அது தவிர கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையைத்தை வாங்கிய அதானி நிறுவனமும் கெப்புன்கொட கடற்பரப்பிலிருந்தே மணலை பெறவுள்ளனர். அத்துடன் பட்டியகம எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கும் அங்கிருந்தே பெறப்போகிறார்கள். இவ்வாறு எமது கடல் வளங்கள் அழிக்கப்படும் வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் காரணமாகவே, வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த முத்துராஜவெல அபய பூமி பகுதியை நகர அதிகாரசபையின் கீழ் கொண்டு வருவதற்கு கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.எமது மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யும், நாட்டின் தேசிய வளங்களை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை நிறுத்துக.

முத்துராஜவல அபய பூமி நிலப்பகுதி பகுதியை நகர அபிவித்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு" அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39