லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட வைபவம் ஒன்றில் SERVO மசகு எண்ணெய் உற்பத்திகளுக்கு தனது Global Container பொதியிடல் முறைமையை அறிமுகம் செய்துவைத்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள Global Container பொதியிடல் முறைமையானது, அதிகரித்த வேகம், பாய்ச்சல், மென்மை, உற்பத்தியின் நீண்ட ஆயுட்காலம், அதிக சுமையைத் தாங்கும் எரிசக்தி ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. இப்புதிய பொதியிடல் முறைமையானது வலிமையான மதிப்புமிகு தோற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றையும் வழங்குகின்றது. இப்புதிய வடிவமானது மேம்பட்ட வலிமையைத் தருவதுடன், அழகிய தோற்றம் மற்றும் உணர்வையும் கொள்வனவாளர்களுக்குத் தருகின்றது.

லங்கா ஐ.ஓ.சி. பீ.எல்.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷியாம் போஹ்ரா கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் Global Container எண்ணக்கருவை அறிமுகம் செய்து வைப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். LIOC நிறுவனம் எப்போதும் புத்தாக்கத்தையும், மாற்றத்தையும் வலிமையாக முன்னெடுத்து வந்துள்ளதுடன் குறிப்பாக எமது நுகர்வோர் உட்பட எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மிகச் சிறந்தவற்றை வழங்கிவந்துள்ளது. 

LIOC நாட்டில் 17.5% என்ற சந்தைப்பங்கை தன்வசம் கொண்டுள்ளது. அத்துடன் Servo வர்த்தகநாம மசகு எண்ணெய் உற்பத்திகளை மாலைதீவிற்கும் LIOC ஏற்றுமதி செய்துவருகின்றது. 1,000 இற்கும் மேற்பட்ட வணிக தரங்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படக்கூடிய வகையில் 1,500 இற்கும் மேற்பட்ட உற்பத்திச் சூத்திரங்களுடன், மோட்டார் வாகன, கைத்தொழில் மற்றும் சமுத்திர பிரிவுகள் அனைத்திற்கும் ஒட்டுமொத்த மசகு எண்ணெய் தீர்வுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியினை SERVO வழங்கிவருகின்றது.

நவீன தொழில்நுட்பம் உயர் தரத்திலான உற்பத்திகளுக்காக இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள SERVO, IndianOil நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் விசாலமான கலவை மற்றும் விநியோக வலையமைப்பு ஆகியவற்றின் பக்கபலத்தையும் கொண்டுள்ளது”.

இந்தியாவில் மசகு எண்ணெய் மற்றும் கிறீஸ் உற்பத்திகள் மத்தியில் வர்த்தகநாம முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற SERVO வர்த்தகநாமமானது, இந்தியாவின் Superbrands மன்றத்திடமிருந்து “Consumer Superbrand” அந்தஸ்தையும் சம்பாதித்துள்ளது. அதன் வர்த்தகநாம தலைமைத்துவத்திற்காக World Brand Congress அமைப்பிடமிருந்து இனங்காணல் அங்கீகாரத்தையும், CMO, Asia அமைப்பிடமிருந்து Master Brand என்ற அங்கீகாரத்தையும் சம்பாதித்துள்ள SERVO, உலகில் தற்போது 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான அளவில் நிலைபெற்றுள்ளது. 

சில்லறை வர்த்தத்துறையைப் பொறுத்தவரையில், LIOC பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு புறம்பாக, நாடெங்கிலும் SERVO மசகு எண்ணெய் விநியோகத்தர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான வலையமைப்பினூடாக SERVO மசகு எண்ணெய் உற்பத்திகள் கிடைக்கப்பெறுகின்றன. Servo Shop விற்பனை நிலையம்ரூபவ் பேணற்சேவை நிலையம், SERVOXPRESS  சேவை மையங்கள், கடைத்தெரு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறுபட்ட சில்லறை வர்த்த நிலையங்கள் மூலமாகவும் நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்கள் மூலமாகவும், இந்த உற்பத்திகளை நாட்டின் மூலைமுடுக்கு எங்கிலும் பெற்றுக்கொள்ள முடியும். பிரத்தியேகமான விற்பனை மையங்களாக தொழிற்பட்டு வருகின்ற SERVO Shop விற்பனை மையங்கள், சௌகரியமான இடங்களில் அமைந்துள்ளதுடன்,வாடிக்கையாளர்களுக்கு SERVO மசகு எண்ணெய் உற்பத்திகளை வழங்கி வருகின்றன.

LIOC நிறுவனம் அண்மையில் அதிக செயற்திறன் கொண்ட மசகு எண்ணெய் உற்பத்திகளை அறிமுகம் செய்து வைத்திருந்தது. Hybrid மோட்டார் கார்கள் Outboard 2 Stroke இயந்திரங்களுக்கு முன்னணி தர அடிப்படையிலான எண்ணெய் வகைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சேர்க்கைகள், மோட்டார் சைக்கிள்களுக்கான Front fork எண்ணெய், Servo Futura P Plus 0w20, Servo 2T XL, Servo Front Fork Oil, Servo Futura P Plus 15w40 ஆகிய பெயர்களுடன் அதிக வலு கொண்ட மோட்டார் கார்களுக்கான இயந்திர எண்ணெய் உற்பத்திகள் அவற்றுள் அடங்கியுள்ளன.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் ISO 9001:2015 சான்று அங்கீகாரத்துடன் திருகோணமலையில் அமைந்துள்ள மசகு எண்ணெய் கலவை நிலையத்தில் லங்கா ஐஓசி தனது Servo வர்த்தகநாம மசகு எண்ணெய் உற்பத்திகளை கலவை செய்து வருகின்றது. Fortune 500 நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற IOCL நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாக லங்கா ஐஓசி பீஎல்சி தொழிற்பட்டு வருகின்றது. 

அரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்குப் புறம்பாக நாட்டிலுள்ள ஒரேயொரு தனியார் எண்ணெய் நிறுவனமாக இது தொழிற்பட்டு வருவதுடன், இலங்கையில் 199 சில்லறை வியாபார பெட்ரோல்ஃடீசல் நிரப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் மிகவும் திறன்மிக்க மசகு எண்ணெய் சந்தைப்படுத்தல் வலையமைப்பொன்றையும் கொண்டுள்ளது. 

இலங்கையிலுள்ள மிகப் பாரிய பெட்ரோலிய களஞ்சியப்படுத்தல் வசதியாக திருகோணமலையில் எண்ணெய்க் குதம் ஒன்றையும், வருடம் ஒன்றில் 18,000 தொன் கொள்ளளவு கொண்ட மசகு எண்ணெய் கலவை நிலையத்தையும், நவீன எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்திகள் சோதனை ஆய்வுகூடமொன்றையும் திருகோணமலையில் கொண்டுள்ளது. SERVO வர்த்தகநாம மசகு எண்ணெய் உற்பத்திகளுக்குப் புறம்பாக, அதன் உற்பத்தி வரிசையை வலுப்படுத்தும் வகையில் ‘XtraPremium Euro III Petrol, XtraMile Diesel’ அடங்கலாக ஆற்றல்மிக்க வர்த்தகநாமங்களின் ஒரு வலுவான தொகுப்பையும் அது கொண்டுள்ளது.