(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
நமிபியாவுக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு 2 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 52 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
எவ்வாறாயினும் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானைவிட நிகர ஓட்ட வேகத்தில் நியூஸிலாந்து தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கின்றது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் அவ்வணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் இந்தியாவின் போட்டி முடிவுகள் அரை இறுதிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும்.
இக் குழுவிலிருந்து பாகிஸ்தான் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிட்டது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.
முன்வரிசை வீரர்கள் தடுமாற்றத்துக்கு மத்தியில் மந்தகதியில் ஓட்டங்களைப் பெற 14 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து 4 விக்கெட் இழப்பு 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால், க்லென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷாம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் வெறும் 24 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்து அணியைப் பலப்படுத்தினர்.
பிலிப்ஸ் 21 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் ஆட்டமிழக்கமால் 39 ஓட்டங்களையும் நீஷாம் 23 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களைவிட அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் மைக்கல் வென் லிங்கென் (25), ஸேன் க்றீன் (23), ஸ்டீவன் பியர்ட் (21) ஆகியோர் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அபு தாபியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM