இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவையினை புரிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் குழுவின் இந்திய பிரதிநிதியாக செயற்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.