2021 டி-20 உலகக் கிண்ண பயணத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்த இலங்கை

Published By: Vishnu

05 Nov, 2021 | 07:51 AM
image

அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் தனது இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண பயணத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தது இலங்கை அணி.

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் மூன்று போட்டிகளில் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளமையினால் டி-20  உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கை நழுவிப்போயுள்ளது.

எனினும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்கள் கடந்த கால வருத்தங்களிலிருந்து மீண்டு நம்பிக்கைக்கும் வெற்றிப் பாதைக்கும் திரும்பியுள்ளது.

190 ஓட்டம் என்ற இலக்கை நிர்ணயிப்பதற்காக இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சுதந்திரத்துடனும் திறமையுடனும் அபுதாபியில் விளையாடினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 189 ஓட்டங்களைப் பெற்றதற்கு சரித் அசலங்க மற்றும் பத்தும் நிஸங்க ஆகியோர் முக்கிய பங்காற்றினர். 

இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 61 பந்துகளில் 91 ஓட்டங்களை சேர்த்தனர்.

பத்தும் நிஸங்க 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களையும், அசலங்க 41 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

போட்டித் தொடரில் அதிகம் தேடப்படும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் திகழும் சரித் அசலங்க, நேற்று தனது இன்னிங்ஸ் மூலம் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்களில் முதன்மையானவராக மாறியுள்ளார். 

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இடது கை ஆட்டக்காரர் தற்போது 46.2 இன்னிங்ஸ் சராசரியுடன் 231 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேசமயம் எட்டு ஆட்டங்களில் 221 ஓட்டங்களை குவித்துள்ள நிஸங்க பட்டியலில் அவருக்கு ஒரு இடம் பின்னால் உள்ளார். 

 9 ஆவது டி-20 சர்வதேச போட்டியில் விளையாடிய அசலங்க, தனது இரண்டாவது டி-20 அரைசதத்தை நேற்று பதிவு செய்தார். இந்த இன்னிங்ஸ் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.

அதேநேரம் பதும் நிஸங்க பெற்று கொண்ட மூன்றாவது அரை சதம் இதுவாகும்.

அனுபவத்தில் இலங்கையை விட முன்னிலையில் உள்ள மேற்கிந்தியதீவுகள் அணி 190 என்ற வெற்றியிலக்கை துரத்தியது. எனினும் அவர்களால் 20 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இந்த போட்டியின் முடிவுகளின் பிரகாரம் மொத்தமாக நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவியுள்ள மேற்கிந்தியத்தீவுகளின் அரையிறுதிக்கான வாய்ப்பு கை நழுவியது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு வரத் தவறியமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரரான ஷிம்ரன் ஹெட்மேயர் தனித்து துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் முடியும் வரை விக்கெட்டை பாதுகாத்தார்.

54 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட இடது கை ஆட்டக்காரரான அவர் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் தனது இன்னிங்ஸை வண்ணமயமாக்கினார்.

அவருக்கு அடுத்தபடியாக நிகோலஷ் பூரண் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, தசூன் சானக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த உலகக் கிண்ணத்தின் தகுதிச் சுற்று உட்பட அனைத்து போட்டிகளிலும் ஹசரங்க மொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35