மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - இராணுவத்தளபதி

Published By: Digital Desk 3

04 Nov, 2021 | 05:24 PM
image

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் சிலர் சுகாதார விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் கவனயீனமாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மீண்டும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாயப்பை உருவாக்கும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களில் சிலர் செயற்படும் விததத்திற்கமைய எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இதனை தடுக்க முடியாத நிலைமையும் ஏற்படும்.

தற்போது நாளாந்தம் 10 - 25 மரணங்கள் பதிவாகி வருகிறது. அத்தோடு நாட்டில் இன்னும் சிலர் தடுப்பூசியைப் பெறாமலுள்ளனர்.

அவ்வாறானவர்களை துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். அத்தோடு மேலும் சிலர் வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட சிலரின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக தற்போது சீராகவுள்ள கொவிட் நிலைமையில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28