பெரும்போக விளைச்சல் குறைவடைந்தால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு - விவசாயத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 3

04 Nov, 2021 | 05:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சேதன பசளை பயன்பாட்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட  நாடு நெல்லுக்கான உத்தரவாத விலை 100 ரூபாவாக வழங்கப்படும். பெரும்போக விளைச்சல் குறைவடைந்தால் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒரு கிலோகிராம் நெல்லை 80 ரூபாவிற்கும்,சம்பா நெல்லை 100 ரூபாவிற்கும்,கீரிசம்பா நெல்லை 125ரூபாவிற்கும் பெற்றுக் கொள்ள வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

சேதன பசளை உர செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில்  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பெரும்பாலான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்படுபவதில்லை.அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்கிறார்கள்.

சேதன பசளை உரத்தை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளப்படும்  நாடு வகையிலான ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 80 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும்.

விவசாயிகள் சேதன பசளையை பயன்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.விளைச்சல் குறைவடைந்தால் அதற்கான நட்டஈடு வழங்கப்படும்.என்பதை ஏற்கெனவே அறிவித்துள்ளோம்.

நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் காரணமாக தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பது முற்றிலும் தவறானது.குறுகிய அரசியல் நோக்கங்களை துறந்து சிறந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என்றார்.

தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்காக மாத்திரம் நெனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் லீட்டர் நெனோ- நைட்ரஜன் திரவ உரம் முதற்கட்மாக இறக்குமதி செய்யப்பட்டது.

இரண்டாம் கட்டாமக நேற்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானத்தில் நெனோ-நைட்ரஜன் திரவ உரத்தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.ஒரு விமானத்தில் 447,30 கிலோகிராம் திரவ உரமும், பிறிதொரு விமானத்தில் 447,73 கிலோகிராம் திரவ  உரமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24