கப்ராலுக்கு எதிரான கட்டளை நீதிப்பேராணை மனு தள்ளுபடி

Published By: Digital Desk 3

04 Nov, 2021 | 11:53 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட முடிவினை  செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரியும்  அவரைக் கைது செய்து விசாரணை செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரியும்  தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டளை நீதிப்பேராணை மனு விசாரணைக்கு ஏற்கப்படாது தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதற்கான உத்தரவை மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் பிறப்பித்தது.

இந்த மனுவானது பரிசீலிக்கப்பட்ட போது மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைத்த சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டிருந்தார். 

அரசியலமைப்பின் 35 ஆவது  உறுப்புரை பிரகாரம் ஜனாதிபதியின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்த, மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரமில்லை என சுட்டிக்காட்டி அவர் குறித்த வாதத்தை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்ற தீர்மானத்தை அறிவித்த நீதிமன்றம், சட்ட மா அதிபரின் வாதத்தை மன்று ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. 

அதன்படியே எந்த சட்ட அடிப்படையும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாக  நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுக்க  கோரி கடந்த செப்டம்பர் 14 அம் திகதி தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன்  மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிபேராணை மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள  விதந்துரைகளை மையப்படுத்தி அஜித் நிவார்ட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்  சட்டமாதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

சட்டமாதிபர், பொலிஸ்மா அதிபர், அஜித் நிவார்ட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம். ஜே.வை, பி பெர்னான்டோ ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13