500 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி

Published By: Digital Desk 3

04 Nov, 2021 | 10:36 AM
image

(இராஜதுரை ஹஷான்)

விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் சவாலை எதிர்க் கொள்ளல் உள்ளிட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க  டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. 

இந்நிதிதவி வழங்கும் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்திட்டத்தின் மூலம் 16 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சர் ஆட்டிகல கைச்சாத்திட்டுள்ளதுடன், உலக வங்கி சார்பில் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஹாக்பர் கைச்சாத்திட்டுள்ளார்.

இலங்கையின் விவசாயம் கிராமபுற மக்களின் பிரதான வாழ்வாதாரமாக காணப்படுகிறது. விவசாய வளங்கள் தேசிய மற்றும் சர்வதேச சந்தையினை இணைக்கும் வகையில் காணப்படுகிறது.

புரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், மாகாண பிரிவுகளில் உள்ள வீதிகளில் 67 சதவீதமும், கிராமபுறங்களில் 13 சதவீதமான வீதிகளும் இதுவரையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

வீதி விபத்து உயிரிழப்புக்களில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. இலங்கையில் வீதி விபத்தினால் வருடத்திற்கு சுமார் 3 ஆயிரம் மரணங்கள் பதிவாகுகின்றன.

கிராமபுற பகுதிகளில் வாழும் மக்களை சுகாதாரம், கல்வி சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களுடன் இணைக்க வேண்டுமாயின் இலங்கையில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான சாலை வலையமைப்பு அவசியமாகும் என தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் ஹார்ட்விக் ஷாக்பர் தெரிவித்துள்ளார்.

அளவிடப்பட்ட வீதி முதலீடுகள் இலங்கையின் மனித மூலதனத்தை துரிதப்படுத்தும், அது நிலையான மற்றும் சிறந்த பொருளாதார வளர்ச்சிக்க வழிவகுக்கும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற நிதியுதவியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் செயற்திட்டம் அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்தின் முக்கிய முயற்சியான 1 இலட்சம் கிராமிய வீதி அபிவிருத்திக்க வலு சேர்க்கும்.

இச் செயற்திட்டம் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும். திட்ட மேற்பார்வை தொடர்பில் தேசிய வழிநடத்தல் குழு நியமிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08