மலையகத்தில் அடுத்தவருடத்தில் 10000 தனிவீடுகள் அமைக்கப்படும் 

Published By: Ponmalar

22 Sep, 2016 | 08:45 PM
image

(ஆர்.ராம்)

மலையக மக்களுக்காக 50ஆயிரம் வீட்டுத்திட்டம் 2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டபோதும், தற்போது அத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு தெளிவில்லாதுள்ளது. அத்துடன்  அவ்வாறான திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

அதேவேளை மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியுடன் கூடிய தனிவீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அடுத்த வருடத்தில் 10ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும்  அவர்  குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அமைச்சர்   மேலும் தெரிவிக்கையில்,

 2014 அக்டோபர் மாதம் 23ம் திகதி களுத்துறை டெல்கித் பகுதியில் அப்போதைய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டத்துடன் தற்போது நான் பொறுப்பேற்றுள்ள அமைச்சுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதற்கான பதிலை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் இருந்தே பெற வேண்டும் என்பதை இந்த சபையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

மேலும் 2014 வரவு செலவு திட்டத்தின்போது  டக்ளஸ் தேவானந்தாவும் நானும் பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் என்ற ஒன்றை பெருந்தோட்ட மக்களுக்கென அறிவித்தது உண்மையேயாகும். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவில்லை. நான் அறிந்தமட்டில் அப்படி ஒரு வீடமைப்புத் திட்டமும் செயப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.  

ஆனாலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர் ச் காணியுடன் கூடிய தனி வீட்டுத் திட்டத்தை செயற்படுத்த நிதியும் பூரண ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனது அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தில் நுவரெலியா  பதுளை  கண்டி  மாத்தளை  இரத்தினபுரி  கேகாலை  காலி மாவட்டங்களுடன் களுத்துறை மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

தற்போதைக்கு களுத்துறை மாவட்டத்தில் மொஹமதியா தோட்டத்தில் 25 வீடுகளும் ஹெதிகல தோட்டத்தில் 13 வீடுகளும் கோவின்ன தோட்டத்தில் 26 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வருட இறுதிக்குள் இவ்வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். 

அதுமாத்திரமன்றி லயன் வீடுகளை இல்லாதொழித்து தனி வீடுகளில் பெருந்தோட்ட மக்களை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பல தடைகளை தாண்டி முழு மூச்சுடன் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன். 

அதன் பயனாக அடுத்த வருடத்தில் மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்மூலம் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01