ஆப்கானை வென்று அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்தது இந்தியா 

04 Nov, 2021 | 07:03 AM
image

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபு தாபியில் புதன்கிழமை (3) நடைபெற்ற குழு 2 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா 66 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

Rahmanullah Gurbaz and Virat Kohli have an exchange, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

தனது ஆரம்பப் போட்டிகளில் பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்விகளைத் தழுவிய இந்தியாவினால் அரை இறுதிக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் முதலாவது வெற்றியை நேற்று ஈட்டியுள்ளது.

KL Rahul and Rohit Sharma make their way out to bat, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

இதன் மூலம் இக் குழுவிலிருந்து பாகிஸ்தானுக்கு அடுத்ததாக அரை இறுதிக்கு செல்வதற்கான வாயிலை இந்தியா திறந்துகொண்டுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

R Ashwin celebrates with his team-mates, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

கே. எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 88 பந்துகளில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

KL Rahul and Rohit Sharma gave India a rapid start, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

ரோஹித் ஷர்மா 47 பந்துகளில் 8 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 74 ஓட்டங்களையும் ராகுல் 48 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 69 ஓட்டங்களையும் குவித்தனர்.

Najibullah Zadran is bowled by R Ashwin, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

Rishabh Pant launches one for a six, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

துடுப்பாட்டத்தில் கரிம் ஜனத் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் அணித் தலைவர் மொஹம்மத் நபி 35 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றனர். இவர்கள் இருவரும் 6 ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

KL Rahul goes aerial, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

இந்திய பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

Gulbadin Naib roars after dismissing KL Rahul, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

Naveen-ul-Haq unsuccessfully appeals for lbw, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

Hardik Pandya plays a flat-batted shot, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

Mohammad Shahzad and Hardik Pandya collide while the batter takes a run, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

Virat Kohli congratulates Jasprit Bumrah, Afghanistan vs India, T20 World Cup, Group 2, Abu Dhabi, November 3, 2021

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35