சட்டவிராேத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை - சரத் வீரசேகர

Published By: Digital Desk 3

03 Nov, 2021 | 11:05 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பெரும் தடையாக இருக்கின்றது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிராேத குற்றச்செயல்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

போதைப்பொருள் வியாபாரம், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துவருகின்றாேம். 

பல்வேறு சட்டவிராேத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் பலர் இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் இவ்வாறு சட்டவிராேத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதுடன் அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். 

அதேபோன்று பொலிஸ் திணைக்களத்தில் கடமையில் இருக்கும் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். 

இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடு, போதைப்பொருள் கடத்தல், வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கின்றது. அதனால் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27