இலங்கை ஆட்பதிவு திணைக்களம் ஜாவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில்  ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை (23) மற்றும் 26 திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறாது எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 ஆண்டுக்கு முன் சுமார் 100 அரச நிறுவனங்களை  கொழும்பு நகருக்கு வெளியில் கொண்டு செல்லும் அரசாங்க திட்டத்தின் விளைவாகவே குறித்த ஆட்பதிவு திணைக்களம் பத்தரமுல்லைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.