2021 லங்கா பிரீமியர் லீக்; வீரர்களின் தெரிவுக்கான திகதி நவம்பர் 05

Published By: Vishnu

03 Nov, 2021 | 08:13 AM
image

2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வுசெய்வதற்கான (Player Draft) நடவடிக்கை எதிர்வரும் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் இந்த வீரர்களின் தேர்வு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளின் அனுசரணையில் நடைபெறும். 

போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் அல்லது பயிற்சியாளர்களினால் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதன்படி, 300 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 300 உள்ளூர் வீரர்கள் என மொத்தம் 600 வீரர்கள் இந்த ஆண்டுக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றுள்ளனர். 

இது கடந்த ஆண்டை விட 165 வீரர்கள் அதிகம். 

ஒரு அணியில் 14 உள்ளூர் மற்றும் 06 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்கலாக 20 வீரர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேவைப்பட்டால் ஒரு அணி முந்தைய ஆண்டு அணியில் இருந்து 08 வீரர்களை (04 உள்ளூர் மற்றும் 04 வெளிநாட்டு வீரர்களை) தக்க வைத்துக் கொள்ளலாம், மீதமுள்ளவர்கள் வரவிருக்கும் ‘பிளேயர் டிராஃப்டில்’ இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

டிசம்பர் மாதம் 05 ஆம் தேதி தொடங்குவதற்கு திட்டமிடப்பட்ட லங்கா பிரிமியார் லீக்கின் முதல் சுற்று போட்டிகள் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்திலும் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49