இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் இடம்பெற்றன என்பதில் ஐயமில்லை : வேன் ஜோர்டாஷ்

Published By: Digital Desk 3

03 Nov, 2021 | 11:27 AM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன உள்ளடங்கலாக இலங்கையின் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமர்ப்பணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் மிகவும் வலுவானவையாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் தேர்ச்சி பெற்றவரும் பாரிஸ்டரும் குளோபல் ரைட்ஸ் கொம்ப்லையன்ஸ் அமைப்பின் இணை ஸ்தாபகருமான வேன் ஜோர்டாஷ், இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் இடம்பெற்றன என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, முன்னாள் இராணுவப்பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தும் சமர்ப்பணம் 200 இலங்கைத் தமிழர்கள் சார்பில் 'குளோபல் ரைட்ஸ் கொம்ப்லையன்ஸ்' என்ற சர்வதேச அமைப்பினால் கடந்த மாதம் 27 ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்தமைக்கான காரணம், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்படும் ஆதாரங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குளோபல் ரைட்ஸ் கொம்ப்லையன்ஸ் அமைப்பின் இணை ஸ்தாபகர் வேன் ஜோர்டாஷ் பகிர்ந்துகொண்டிருக்கின்றார். 

'இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களைத் துன்புறுத்தும் வகையிலான கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சித்திரவதைகளுக்குள்ளான ஆயிரக்கணக்கான அல்லது பத்தாயிரக்கணக்கான நபர்களில் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 200 பேரிடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன் அவற்றின்மூலம் மேற்குறிப்பிட்ட விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்று அதில் ஜோர்டாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மியன்மார் மற்றும் பங்களாதேஷில் இடம்பெற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்ட 400 ரோஹிங்கிய பெண்கள் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்திருந்த வேன் ஜோர்டாஷ், ரோஹிங்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் '400 ரோஹிங்கிய பெண்கள் சார்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியமையே தற்போது 100 இலங்கைத் தமிழர்கள் சார்பில் சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கான முன்னோடியாக அமைந்தது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

'நான் இலங்கைத் தமிழர்களின் நிலைவரம் தொடர்பில் அவதானம் செலுத்தினேன். அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட முறை குறித்தும் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் காரணமாக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டமை குறித்தும் அறிந்தபோது அக்குற்றச்செயல்கள் மற்றும் ஆதாரங்கள் தொடர்பில் ஆராயும் உத்வேகம் ஏற்பட்டது' என்று கூறியுள்ள குளோபல் ரைட்ஸ் கொம்ப்லையன்ஸ் அமைப்பின் இணை ஸ்தாபகர் ஜோர்டாஷ், அதுமாத்திரமன்றி இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டக்கூடிய குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை நாம் முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சமர்ப்பணங்களில் இலங்கை தொடர்பான சமர்ப்பணங்கள் மிகவும் வலுவானவையாக அமைந்திருப்பதாக அந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ள அவர், 'தமிழர்களுக்கு எதிரான கடத்தல்கள், சட்டத்திற்கு முரணான தடுத்துவைப்புகள், சித்திரவதைகள், நாடுகடத்தல்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான உரிமை மறுக்கப்படல், பிறிதொரு நாட்டில் அகதி அந்தஸ்த்தை நாடுதல் தொடர்பில் திரட்டப்பட்டுள்ள ஆதாரங்கள் மிகவும் வலுவானவையாக உள்ளன. இத்தகைய குற்றங்கள் இடம்பெற்றன என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. அவை தொடர்ந்து இடம்பெறும் என்பதிலும் ஐயமில்லை. எனவே நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சமர்ப்பணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் மேற்படி மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவர்களா? அவர்கள் எந்தளவு தூரத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள்? என்பதே தற்போது காணப்படும் கேள்வியாகும். எது எவ்வாறெனினும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் வலுவானவையாக இருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது திரட்டப்பட்டுள்ள ஆதாரங்களின் பிரகாரம், நிச்சயமாக 'ஆதாரங்கள்' ஒரு சவாலாக இருக்காது. மாறாக ஜனாதிபதியை பிடிக்கமுடியுமா என்பதே சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ள வேன் ஜோர்டாஷ், அதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் மிகவும் மந்தகரமானவையாகக் காணப்படுவது மற்றுமொரு சவாலாகும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32