2021 ஆம் ஆண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Published By: Vishnu

02 Nov, 2021 | 12:54 PM
image

கொவிட் தொற்றால் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபொற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர) மற்றும் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்;ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

  • தரம் 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை : 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை
  • கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை : 2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 மார்ச் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரை
  • கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை : 2022 மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 ஜூன் மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை வரை

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02