கண்டி - பல்லேகலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் இன்று தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபர்  சிறைச்சாலையில் இருந்து, விசாரணைக்காக பன்வில நீதிமன்றிற்கு அழைத்துச்செல்லும் போது தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபரை தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.