(ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம்) 

தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என்ற அரசின் வரவு செலவுத் திட்ட யோசனை நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அரசின்  நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹதுன்னெத்தி இன்று சபையில் முன்வைத்ததோடு

"ப்ரோடைம்" சட்டத்திற்கமைய இலங்கைக்கு தேங்காய் இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

 நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு செலவுத் திட்டத்தில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுமென்ற யோசனையை முன்வைத்துள்ளார். 

ஆனால் இதற்கு பொறுப்பான பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவின் திஸாநாயக்க இந்த யோசனையை எதிர்க்கின்றார். 

தேங்காய் இறக்குமதி செய்வதை தான் எதிர்ப்பதாகவும் அதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு கடந்த காலங்களில் பாகிஸ்தானிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட தேய்ங்காய்கள் கடலில் கொட்டப்பட்டது. 

அதேவேளை " ப்ரோடைம்" சட்டத்திற்கமைய இலங்கைக்கு தேங்காய்களை இறக்குமதி செய்ய முடியாது. 

இவ்வாறானதோர் சூழ்நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தேங்காய் இறக்குமதி யோசனை நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அரசின் தீர்மானம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றார்.