தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.

கில்லி படம் விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கிய இடத்தை பிடித்தது. வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தற்போது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் கில்லி 2 வருமா என்று தரணியிடம் அண்மையில் கேட்கப்பட்டுள்ளது

இதற்கு அவர் கில்லி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் என இயக்குனர் தரணி தெரிவித்துள்ளார்.

கில்லி இரண்டாம் பாகம் எடுக்க தரணி தயாராக உள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. விஜய்யின் படங்களில் கில்லி திரைப்படம் ஒரு மைல் கல்லாக இருப்பதால் கில்லி இரண்டாம் பாக்கத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது பரவ தொடங்கியுள்ளது.