பலப்படும் பாதுகாப்பு உறவுகள்

Published By: Digital Desk 2

31 Oct, 2021 | 07:33 PM
image

சுபத்ரா

இரண்டாம் உலகப் போரின் போது, சொலமன் தீவுக் கூட்டத்தில் உள்ள, குவாடல் கனல் தீவில் ஜப்பானியப் படைகளின் தாக்குதலில் சிக்கிய அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவை மீட்கும் நடவடிக்கையின் போது, அமெரிக்க கடலோரக் காவல்படையைச் சேர்ந்த டக்ளஸ் முன்ட்ரோ உயிரிழந்தார்.

தரையிறங்கு கலம் மூலம் மரைன் படையினரை மீட்டுக் கொண்டிருந்த போது, ஜப்பானியப் படைகள் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தன. அப்போது, தரையிறங்கு கலத்துக்கு கவசமாக தனது படகைச் செலுத்தி முழுச் சூட்டையும் தன் மீதும் தனது படகின் மீதும் வாங்கி, பல நூறு மரைன் படையினரை காப்பாற்றியவர் அவர்.

அமெரிக்காவின் உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரே அமெரிக்க கடலோரக் காவல் படை அதிகாரியான டக்ளஸ் முன்ரோவின் பெயர் சூட்டப்பட்ட, கடலோரக் காவல்படைக் கப்பல், கடந்தவாரம் இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ஜயரத்ன தலைமையிலான கடற்படைக் குழுவினர், சியாட்டிலில் உள்ள அமெரிக்க கடலோரக் காவல்படையின் தலைமையகத்தில் இந்தக் கப்பலைப் பொறுப்பேற்றுள்ளனர்.

115 மீற்றர் நீளம் கொண்ட, 29 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய இந்தப் போர்க்கப்பலில், 187 மாலுமிகள் பணியாற்ற முடியும்.

கிட்டத்தட்ட அரை தசாப்த காலம் அமெரிக்க கடலோரக் காவல்படையில் பணியாற்றி சேவையில் இருந்து நீக்கப்பட்ட, இந்தக் கப்பல் இலங்கை கடற்படைக்கு கொடையாக வழங்கப்படுகிறது.

சில மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஏழு மாதங்களில் இந்தக் கப்பல் இலங்கையை நோக்கிப் பயணமாகவுள்ளது.

இலங்கை கடற்படைக்கு ஏற்கனவே அமெரிக்கா 2004ம் ஆண்டில் சமுத்ர என்ற போர்க்கப்பலையும், 2018ஆம் ஆண்டு கஜபாகு என்ற போர்க்கப்பலையும் கொடையாக வழங்கியிருந்தது.

இப்போது மூன்றாவது கப்பல் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-35

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13