பன்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் : நிரூபமாவிடம் இந்த வாரம் விசாரணை ?

Published By: Gayathri

31 Oct, 2021 | 06:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)



சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவிடம் இந்தவாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.  


நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனிடம் குறித்த ஆணைக்குழு இரு  நடவைகள் விசாரித்திருந்த பின்னணியிலேயே,  நிரூபமாவிடமும்  விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.



நிரூபமா ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுக்க, அவருக்கு கடந்த வாரம் ( 25 ஆம் திகதி) ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்தபோதும் சுகயீனம் காரணமாக அன்றைய தினம் அவரால் ஆஜராக முடியாது என அந்த ஆணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்கு மூலம் வழங்க பிரிதொரு தினத்தை வழங்குமாறும் அவரால் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் அவரை விசாரணைக்கு அழைக்க எதிர்ப்பார்ப்பதாக இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பன்டோரா பேப்பரில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.

அதன்படியே விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி  உத்தரவிட்ட நிலையில்,   இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க விதானகேவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51