உரப் பிரச்சினைக்கு சில நாட்களில் நிரந்தரத் தீர்வு : விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் அரசியல் நோக்கம் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published By: Gayathri

31 Oct, 2021 | 04:37 PM
image

(எம்.மனோசித்ரா)

உர பிரச்சினைக்கு இன்னும் சில நாட்களில்  நிரந்தரமான தீர்வு  கிடைக்கும்.விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்று இழப்பீடு வழங்குவதாக இருந்தால் போராட்டம் நடத்துவதில் அர்த்தமில்லை. 


இந்த எதிர்ப்பு அலைக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.



புதிய  களனி பாலத்தை பார்வையிடும் விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து  ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிடுகிறார்கள். அப்பாவி மக்களை நெருக்க வேண்டாம் என்றும், கொவிட் தொற்றுநோய் மற்றும் இரசாயன உர விவகாரத்தை தேர்தல் இலாபம் பெறுவதற்காக  பயன்படுத்த முயல வேண்டாம் என்றும் கட்சியினரைக் கோருகின்றோம் என்றார்.



தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று சொல்ல முடியாது. தொழிற்சங்கம் என்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும்.  
அண்மையில்  துறைமுக தொழிற்சங்கங்கள்  கிழக்கு முனையத்தை வழங்குவதை  எதிர்த்தன. இதன் விளைவாக கிழக்கு  முனையத்திற்கு பதிலாக அதனை விட பெரிய  மேற்கு  முனையம் வழங்கப்பட்டது. 



தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள  நெருக்கடி நிலை குறித்து சிந்தித்து செயற்பட  வேண்டும்.

ஒரு அலகு  மின்சாரத்தின் விலை குறைவதாக இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அதனை எதிர்க்கின்றன? குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் அது ஊழல் ஆகாது. 



தொழிற்சங்கங்கள் அதிக விலைக்கு சார்பாக இருந்தால் அதன் பின்னணியில்  அரசியல் நோக்கம் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் நாட்டு மக்களை இரண்டு நாட்களுக்கு இருட்டில் வைத்திருக்க முயல்கின்றன என்றால் அது எத்தகைய அநீதியான முடிவாகும்? மின்சார விலையை குறைக்கும் அரசின் திட்டம் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35