டி-20 உலக கிண்ணத்தில் மூன்றாவது ஹெட்ரிக் சாதனை புரிந்த வீரரானார் ஹசரங்க

Published By: Vishnu

31 Oct, 2021 | 10:03 AM
image

ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றார்.

நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணத்தில் சனிக்கிழமை தென்னாபிரிக்காவுக்கு எதிராக சார்ஜாவில் அரங்கேறிய ஆட்டத்தின்போதே ஹசரங்க இந்த சாதனையை படைத்தார்.

ஹசரங்கவின் மூன்றாவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சல் எய்டன் மார்க்ரமை முதலில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின்னர் அவரது நான்காவது ஓவரின் முதல் பந்தில் தென்னாபிரிக்க அணித் தலைவர் பவுமாவை 46 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

அடுத்து களமிறங்கிய டுவைன் பிரிட்டோரியஸை அடுத்த பந்தில் ஆட்டமிழக்க செய்து, இந்த சாதனையை புரிந்தார் ஹசரங்க.

ஹசரங்கவின் இந்த மகத்தான பங்களிப்பு இலங்கையை வெற்றியின்  விளிம்பிற்கு அழைத்து செல்வற்கு உதவியது.

இருப்பினும் டேவிட் மில்லர் மற்றும் ககிசோ ரபாடாவின் வலுவான இணைப்பாட்டம் இலங்கையின் வெற்றியை தட்டிப் பறித்தது.

ஹசரங்க நான்கு ஓவர்களுக்கு பந்துப்பரிமாற்றம் மேற்கொண்டு 20 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் 11 பந்துகளில் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததால், அடுத்த இரண்டு ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது

இதனால் சூப்பர் 12 இல் இலங்கை இரண்டாவது தோல்வியைத் தழுவியது. 

அவுஸ்திரேலியாவின் பிரட் லீ (2007) மற்றும் ஸ்கொட்லாந்தின் கர்டிஸ் கேம்பர் (2021) ஆகியோருக்குப் பிறகு டி-20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் எடுத்த மூன்றாவது வீரர் ஹசரங்க ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31