இரண்டு தசாப்தங்களின் பின்னர் பாப்பரசருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு

Published By: Vishnu

31 Oct, 2021 | 08:31 AM
image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 30) போப் பிரான்சிஸை சந்தித்து கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதன் விளைவுகள் குறித்து விவாதித்தார். 

Image

இதன்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தினர்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா எடுத்துள்ள இலட்சிய முயற்சிகள் மற்றும் ஒரு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை வழங்குவதில் நாட்டின் வெற்றியைப் பற்றி போப்பிடம் மோடி விளக்கினார்.

தொற்றுநோய்களின் போது தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியாவின் உதவியை போப் பிரான்சிஸ் பாராட்டினார்.

இதன்போது விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி பரிசுத்தருக்கு அழைப்பு விடுத்தார், அதை அவரும் போப்பும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

Image

ஆதாரங்களின்படி, பிரதமர் மோடி மற்றும் போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு 20 நிமிடங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டது, எனினும் அது ஒரு மணி நேரம் நீடித்தது. 

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு இந்தியப் பிரதமர் மற்றும் போப் இடையேயான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜூன் 2000 இல், மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடைசியாக வத்திகானுக்கு சென்று அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் அவர்களைச் சந்தித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52