ஏற்றுமதி பெறுகைகளை மாற்றுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியால் புதிய விதிகள் வெளியீடு

31 Oct, 2021 | 07:04 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மத்திய வங்கியின் நாயணச்சபை 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏற்கனவே காணப்படுகின்ற விதிகளை நீக்கி ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு அனுப்புதல் அத்துடன் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் இம்மாதம் 28 ஆம் திகதியிடப்பட்ட 2251/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளவாறு புதிய விதிகளை வழங்கியுள்ளது.

 புதிய விதிகள் இலங்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதி செய்கின்ற இரு சாராருக்கும் ஏற்புடையதாகும்.

பின்வரும் அதிகாரமளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை நிறைவேற்றுவதன் மீது எஞ்சியுள்ளவற்றை தொடர்ந்து வருகின்ற மாதத்தின் ஏழாவது நாளன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு ஏற்றுமதியாளர்களை இவ்விதிகள் வேண்டுகின்றன.

நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வெளிமுக பண அனுப்பல்கள் , அனுமதிக்கப்பட்டவாறான வெளிநாட்டு நாணயத்தாள்களில் மீளெடுப்பு, வெளிநாட்டு நாணயப்படுகடன் தீர்ப்பனவுச் செலவுகள் அத்துடன் மீள்கொடுப்பனவு, ஒரு மாத கடமைப்பொறுப்புக்கள் உள்ளடங்கலாக பொருட்கள்க் கொள்வனவு செய்தல் மற்றும் பணிகளை பெற்றுக் கொள்ளல், அவ்வாறு கிடைக்கப் பெற்ற ஏற்றுமதிப் பெறுகைகளின் பத்து வீதம் வரை வெளிநாட்டு நாணயத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பிலான கொடுப்பனவுகள் என்பனவாகும்.

அதற்கமைய இவ்விதிகள் வழங்கப்பட்டதன் மூலம் தமது ஏற்றுமதிப் பெறுகைளில் இருந்து பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதி தொடர்பிலான அனைத்து செலவீனத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு இயலுமானதாகவிருக்கும்.

மேற்குறித்தவை தொடர்பிலான மேலதிக தகவல்களை www.dfe.lk என்ற இணையதளத்தில் பிரவேசிப்பதன் மூலம் மேற்கூறப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டவாறான 2021 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல் விதிகளை பார்வையிடுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33