ஒருவரைக் கடத்தி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரிய மூவர் கைது - கொழும்பில் சம்பவம்

31 Oct, 2021 | 06:27 AM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் மோலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்களால் வேனொன்றில் கடத்திச் செல்லப்பட்டு , மாபொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பணம் கோரிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடத்திச் சென்றவர்கள் குறித்த நபரின் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளதோடு , பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டாம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் கடத்தப்பட்ட நபரின் மனைவி ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடத்தல்காரர்களால் வழங்கப்பட்ட தனியார் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் குறித்த நபருக்கு 1000 ரூபாய் பணத்தை வழங்கி அவரை மாபொல பிரதேசத்தில் வீதியொன்றில் விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதோடு , பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் இருந்துள்ளார்.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் இது தொடர்பில் அவர் முறைப்பாடளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பணம் வைப்பிடப்பட்ட வங்கி கணக்கு உரிமையாளர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28, 35 மற்றும் 44 வயதுகளையுடைய வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். கிராண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04