கிழக்கு மாகாண ஆளுநர் தந்த உறுதி மொழியிற்கிணங்க வடமாகாணத்தில் பணியாற்றும் சிற்றூழியர்களை கிழக்கு மாகாணத்திற்கு உடன் இடமாற்றியுதவுமாறு பாதிக்கப்பட்ட சிற்றூழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இவர்கள் இன்று காலையில் கிழக்கு மாகாண சபையின் முன்பாக  திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த வடக்கு மாகாண சபை உருவாக்கத்தின் போது தாம் கிழக்கில் இருந்து குலுக்கல் அடிப்படையில் இடமாற்றம்பட்டதாகவும்  பல ஆண்டுகளாகியும் கிழக்கு மாகாணத்தை சார்ந்த நாம் எமது மாகாணம் மாவட்டத்திற்கு விடுவிக்கப்பட வில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 பல போராட்டங்களின் பின்னர் 2015இல் 35 பேரும் 2016 இல் 35பேரும் என  105 பேர் உள்வாங்கப்படுவார்கள் என மாகாண ஆளுநர் எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

 அனால் அது இதுவரை நடைபெறவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.