இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகியன நாட்டுக்குள் மறைமுகமாக பிரச்சினைகளை தோற்றுவித்து வருகின்றன - சுதந்திரக் கட்சி சாடல்

Published By: Digital Desk 3

30 Oct, 2021 | 02:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நாட்டுக்குள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை மறைமுகமாக தோற்றுவித்து வருகின்றன. இந்நாடுகளுக்கு எதிரான சக்தியை நாட்டுக்குள் ஒருபோதும் தோற்றுவிக்கமாட்டோம்.

இலங்கை சுயமான முன்னேற்றமடைவதற்கு பலம் வாய்ந்த நாடுகள் இடமளிக்க வேண்டும். அமெரிக்கா இலங்கையில் ஆதிக்கம் கொண்டால் இலங்கையின் எதிர்காலம் லிபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு ஒப்பானதாக அமையும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசாங்கத்தின் 11 பிரதான பங்காளி கட்சியினர் ஒன்றினைந்து நேற்று முன்தினம் கொழும்பில் 'மக்கள் பேரவை' மாநாட்டை நடத்தினர்.

அந்நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நியூபபோர்ட் நிறுவனத்திற்கு வழங்க கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு பாரதூரமான பிரச்சினையாக காணப்பட்டாலும்,அதனை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகம்,மின்சாரத்துறை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய பிரதான துறைகளின் தொழிற்சங்கத்தினர் எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளமை பல்வேறு மட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

தொழிற்சங்கத்தினருடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளோம் தொழிற்சங்கத்தினரது கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஐந்து வருட ஆட்சி காலத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு முழு நாட்டையும் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுப்படும் அதிகாரம் கிடையாது.

இதுவே தற்போதைய பிரதான பிரச்சினையாகும்.தேசிய  பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்கள் முற்பட்ட அரசாங்கங்கமும் முன்னெடுக்கவில்லை. தற்போதைய அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. எதிர்காலத்திலும் இந்நிலைமை தொடர கூடாது என்பதற்காகவே போராடுகிறோம்.

இலங்கையில் இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட அமெரிக்கா முயற்சிக்கிறது.இந்தியா,சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நாட்டுக்குள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை மறைமுகமாக தோற்றுவித்து வருகின்றன.

பல்வேறு பட்ட முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.அரசாங்கத்தை வீழ்த்தி தமது தேவையான அரசாங்கத்தை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யுகதனவி மின்நிலைய ஒப்பந்தம் முறையற்ற வகையில் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.இயற்கை எரிவாயு விநியோகத்தை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்ட வேளையில் முறையற்ற வகையில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளித்தால் இலங்கையின் எதிர்காலம் லிபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு ஒப்பானதாக அமையும். இந்தியாவிற்கும்,சீனாவிற்கும் எதிரான சக்தியை இலங்கைக்குள் தோற்றுவிக்கமாட்டோம். சுயாதீனமான முறையில் முன்னேற்றமடையும் முயற்சிகளை இந்தியா,சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தடுக்க கூடாது.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தின் உள்ளடக்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. மூல வரைபுடன் மேலும் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.அதற்கு இடமளிக்க முடியாது.

துறைமுகத்தின் நிலைமையும் பாரதுரமானது.கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இருப்பினும் மறுபுறம் துறைமுகத்தின் 13 ஹேக்கர் நிலப்பரப்பு காணி சீன நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார கேந்திர மையங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்கும் போது அது ஏதாவதொரு வழியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58