இலங்கையின் அழிவு ஆரம்பமாகவுள்ளது - திஸ்ஸ விதாரண எச்சரிக்கை

Published By: Digital Desk 4

30 Oct, 2021 | 07:11 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சாரத்துறைக்கும், வலு சக்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வலு சக்தி துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தினால் இலங்கையின் அழிவு ஆரம்பமாகும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்பட வேண்டும் - திஸ்ஸ விதாரண | Virakesari.lk

புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற 'மக்கள் பேரவை' மாநாட்டில் கலந்து க்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சாரத்துறைக்கும்,வலு சக்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நியூபோர்;ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நெடுகால திட்டத்தின் உள்ளடக்கம் தற்போது வெளியாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவுடன் இரண்டு பிரதான ஒப்பந்தங்களை கைச்சாத்திட முயற்சித்தது.அமெரிக்காவுடனான எக்சா மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால்.இன்று அமெரிக்க இராணுவம் இலங்கையில் முகாமிட்டிருக்கும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடித்தோம்.ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் தற்போது உருமாறி யுகதனவி விவகாரத்தின் ஊடாக வந்துள்ளது.இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டையும்,நாட்டின் இறையான்மையையும் பாதுகாக்க ஒன்றினைந்துள்ளோம்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை விற்பது அமெரிக்காவிற்கு விற்பது இலங்கையின் அழிவிற்கு ஆரம்பமாக அமையும்.நாட்டின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

தவறான தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் ஏனைய விடயங்களை செயற்படுத்த முடியும்.என்பதை அரச தலைவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10