'வோரியர்' கிண்ண ரக்பி செவன்ஸ் நாளை ஆரம்பம்  

Published By: Digital Desk 4

29 Oct, 2021 | 08:19 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் ஆகியவற்றின், ஒன்றிணைந்த ரக்பி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  'வோரியர்' கிண்ண ரக்பி செவன்ஸ் தொடர் நாளை 30 ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 31 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. 

No description available.

கொழும்பு  'பொலிஸ் பார்க்' மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டித் தொடரில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை , இலங்கை பொலிஸ் ஆகியவற்றிலிருந்து தலா 2 அணிகளும் சீ.எச். அண்ட் எப்.சீ. அணியும் ஹெவ்லொக்ஸ் அணியும் விளையடாவுள்ளன.

இப்‍போட்டித் தொடரின் முதலாவது போட்டி 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி 31 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள  ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரில் இலங்கை ரக்பி அணி பங்கேற்கவுள்ளது. 

No description available.

ஆகையால், 'இலங்கை ரக்பி குழாத்துக்கு வீரர்களை தெரிவு செய்யப்படுவதற்காகவே, வோரியர்' ரக்பி கிண்ணத் தொடரை இலங்கை ரக்பி சம்மேளனம் நடத்துகிறது. 

சுகாதார  வழிமுறைகளுக்கு அமைவாக நடத்தப்படும் இப்போட்டித் தொடரை  கண்டுகளிப்பதற்கு இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும், இப்போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களில்  நேரடியாக கண்டுகொள்ள முடியும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58