சேதனப் பசளை இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிடக்கோரும் மனு மீதான பரிசீலனை அடுத்த மாதம்

Published By: Digital Desk 4

29 Oct, 2021 | 08:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெளிநாடுகளில் இருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பரிசீலிக்க நீதிமன்றம் தீர்மனித்துள்ளது.

சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை  மேன் முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (29 ) ஆராய்ந்த போதே இந்த தீர்மானம் எடுக்கபப்ட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் இதற்கான அறிவித்தலை பிறப்பித்தனர்.

 இன்று இந்த மனு ஆராயப்பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, வெளிநாட்டிலிருந்து சேதனப் பசளை இரக்குமதி செய்யப்படப் போவதில்லை என தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே தருவிக்கப்பட்ட சேதனப் பசளை அடங்கிய கப்பலை துறைமுகங்களுக்குள் உள் நுழைய முடியா வண்னம் தடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இதனையடுத்தெ மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த  மனுவில் பிரதிவாதிகளாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாய ராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ,  விவசாய பணிப்பாளர் நாயகம்,  தேசிய பசளைகள் செயலகத்தின் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை,  பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58