தொல்பொருள் எனும் போர்வையில் பிள்ளையார் ஆலய விவசாயக் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு

Published By: Gayathri

29 Oct, 2021 | 08:28 PM
image

மட்டக்களப்பு வந்தாறுமூலை பேரம் பகுதியில் அமைந்திருக்கும் நீர்முக பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான பூர்வீக காணியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்றைய தினம் காணிகளை எல்லையிட  முயன்றபோது அப்பகுதி விவசாயிகளால் மீளவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மாற்று இனத்தவர்கள் வந்து காணிகளை அபகரிப்பதற்கு தாங்கள் எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என அப்பிரதேச விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும் இந்த இடத்தை பாதுகாக்க பல வழியிலும் போராடிய நாங்கள் இனியும் எவருக்கும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.

சுமார் 16 ஏக்கரில் உள்ள குறித்த காணியினை தொல்பொருள் எனும் பெயரில் அபகரிக்கும் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான என்ன ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் வந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10