இனிவரும் காலங்கள் கடினமானதாக அமையும் ! மக்களிடம் முறையிடவுள்ளோம் - அரசாங்கத்திற்கு வாசு எச்சரிக்கை ! 

Published By: Digital Desk 4

29 Oct, 2021 | 08:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நெருக்கடியான சூழ்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றிணைனைந்து அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.

எமது அரசாங்கத்தில் கொள்கைக்கும், நாட்டுக்கும் எதிரான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

தவறுகளை திருத்திக் கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்ததாக காரணத்தினால் மக்களிடம் முறைப்பாடளிக்க தீர்மானித்தோம்.

இனி வரும் காலங்கள் கடினமானதாக அமையும் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ள விக்கிலிய தோட்ட வைத்தியசாலை: வாசுதேவ  நாணயக்கார உறுதி | Virakesari.lk

புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (29 ) இடம்பெற்ற 'மக்கள் பேரவை' மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 நெருக்கடியான காலக்கட்டத்தின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்தோம்.நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்பட்ட சவால்களை எதிர்க் கொள்ள வேண்டியது.

பின்னர் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள்,தீர்மானங்கள் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

மனவேதனையுடன் உள்ள வேளையில் ஒருவருக்கொருவர் துயரங்களை பகிர்ந்துக் கொண்டோம்.பின்னர் இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும்.என தீர்மானித்தோம்.

அனைத்து வெற்றிகளுக்கும் மத்தியில் பிறிதொரு வெற்றி தோற்றம் பெறும்.நாம் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு இணையாக பிறிதொரு சக்திக்கு தற்போது தோற்றம் பெற்றுள்ளது.அச்சக்தி எமக்கு பிரதான சவாலாக உள்ளது.

அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் தீர்மானம் எடுத்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எமது பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடு தொர்பில் தொடர்ந்து வெளிப்படுத்தினோம்.நாம் நினைத்தை காட்டிலும் நிலைமை பாரதூரமான தன்மையினை நோக்கி செல்வதை அறிய முடிகிறது.இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் ஒன்றினைந்து  முறைப்பாடளிக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் தோற்றம் பெற்றுள்ள அனர்த்தத்தை மக்களுக்கு பகிரங்கப்பத்த தீர்மானித்துள்ளோம்.நாம் தோற்றுவிதத அரசாங்கத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட போவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இனி வரும் காலங்கள் கடினமானதாக அமையும்.என்பதை நன்கு அறிவோம்.

எமது தீர்மானத்தை சிறந்த அரசியல் ஞானம் உள்ளவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள்.அரசியல் அறிவில்லாதவர்கள் எமது செயற்பாடுகளை விளங்கிக் கொள்வது கடினமாகும்.அரசாங்கத்தை பிளவுப்படுத்தாலம் ஒன்றினைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்