கொவிட் அலை குறித்து இலங்கை வைத்தியர் சங்கம் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது என்ன ?

Published By: Gayathri

29 Oct, 2021 | 08:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மீண்டுமொரு கொவிட் அலை ஏற்படுவதை தடுத்துக்கொள்வதற்காக பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நான்கு பரிந்துரைகளை  இலங்கை வைத்தியர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு முன்வைத்திருக்கின்றது.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே வைத்தியர் சங்கம் குறித்த பரிந்துரைகளை தெரிவித்திருப்பதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்டை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்திருக்கும் சட்டங்கள் மற்றும் வரையறைகளை மேற்கொள்வதை மிகவும் சிறந்த கண்காணிப்பின் கீழ் உறுதியாக மேற்கொள்ளல்,  கொவிட்டை கட்டுப்படுத்தும் முன்னணி குழுவினருக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்கவேண்டும், அத்துடன் கொவிட் தொற்று மிகவும் தீவிரமாக பரவும் நிலைமையில் நிகழ்வுகளை வரையறை செய்ய நடவடிக்கை எடுத்தல் மற்றும் கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக கவனம் செலுத்தவேண்டும் என்ற 4 பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்கி மக்கள் சாதாரணமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் மேலுமொரு கொரோனா அலை ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது.

அதனால் மீண்டுமொரு கொவிட் அலை ஏற்படுவதை தடுப்பதற்காக, அனைத்து சந்தப்பங்களில் போல் அல்லாமல், இந்த சந்தர்ப்பத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும்  அத்தியாவிசயமாகும் என்றும் இலங்கை வைத்தியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15