காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

29 Oct, 2021 | 04:59 PM
image

(நா.தனுஜா)

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கப்பம் பெறும் நோக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டில் கடற்படை அதிகாரிகளால் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்கான நீதிநிலைநாட்டப்படவில்லை.

மேற்படி 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளடங்கலாக கடற்படை அதிகாரிகள் 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் முன்னாள் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இருப்பினும் அதற்கு மாறாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்குத் தற்போதைய சட்டமா அதிபர் தீர்மானித்த நிலையில், அதற்கெதிராக குறித்த வழக்கின் வாதிகள் தரப்பினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன் அம்மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துவெளியிட்ட காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறியதாவது,

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பலவருடங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனூடாகத் திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத்தளபதி உள்ளடங்கலாக 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னாள் சட்டமா அதிபரினால் தீர்மானிக்கப்பட்டது. 

அதேவேளை தான் குற்றமிழைக்கவில்லை என்று கூறுவதற்கும் அதற்காக சட்டரீதியாகப் போராடுவதற்குமான உரிமை வசந்த கரன்னாகொடவிற்கு இருக்கின்றது.

ஆனால் கடந்த மேமாதம் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம், ஆகஸ்ட் மாதமளவில் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்கின்றார்.

இவ்விடயம் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன்மூலம் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகவும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய சட்டமா அதிபரினால் எதனடிப்படையில் அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது? சட்டமா அதிபர் மக்களை முன்னிறுத்தி செயற்படவேண்டுமே தவிர, அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

அரசாங்கத்தின் அரசியல் ரீதியான தேவைகளுக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் அடிபணிந்திருக்கின்றார். அதன் காரணமாகவே கடந்த காலத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த பலர், அவற்றிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது சட்டமா அதிபர் எதுவும் பேசவில்லை. 

ஆனால் இது 11 பேரின் உயிருடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனைகளை வழங்கவேண்டும் என்று நாம் கோரவில்லை. மாறாக உரியவாறு விசாரணைகளை மேற்கொண்டு, சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். 

அதேவேளை சட்டமா அதிபரின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர்மீது எமக்கு நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்துவதற்குமே நாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36