(சசி)

மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதய தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக பயணிகள் எவரும் குறித்த புகையிரதத்தில் பயணிக்காததால் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பல மணி நேர முயற்சியின் பின் தடம்புரண்ட புகையிரம் சீர்செய்யப்பட்டு வழமை நிலைக்கு திரும்பியது. 

இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.