ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து பேசியது என்ன ?

Published By: Digital Desk 4

28 Oct, 2021 | 08:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான 11 பங்காளி கட்சியின் தலைவர்களுக்கும் உறுப்பினர்கள்,ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான விசேட அவசர சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

காலக்கெடுவின் இறுதி நாள் இன்று ; ஜனாதிபதி, பிரதமர் தரப்பு தொடர்ந்தும்  அமைதி! | Virakesari.lk

யுகதனவி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மாகாணசபை தேர்தல்,பொதுஜன பெரமுனவிற்கும், ஆளும் கட்சியிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டன. பங்காளி கட்சியினர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் கவனம் செலுத்தினர்.

இப் பேச்சுவார்த்தையில்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரும் பங்காளி கட்சி தலைவர்களான வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில, கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச, நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும்,

பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க,அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோரும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல,துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுனவர்தன, மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

யுகதனவி மின்நிலையத்தின் 40சதவீத பங்குகளை அமெரிக்காவின் நியூபோரட் நிறுவனத்திற்கு 15 வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கடந்த மாதம் முன்னெடுத்தது.அரசாங்கத்தின் இத்தீர்மானத்தை ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சியினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இவ்விடயம் குறித்து பங்காளி கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதற்கு பங்காளி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

யுகதனவி விவகாரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் பிரதமர் மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி பங்காளி கட்சியினருக்கு பதிலளித்துள்ளார்.இவ்வாறான நிலையில் பங்காளி கட்சியினர் யுகதனவி விவகாரம் தொடர்பில் இன்று மக்கள் மாநாட்டை நடத்த தீர்மானித்திருந்தனர்.

இவ்வாறன பின்னணியில் பங்காளி கட்சியின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையிலான அவசர பேச்சுவார்த்தை ஜனாதிபதி தலைமைத்தவத்தில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37