இராணுவத்திடமிருந்த 11 ஏக்கர் காணி மக்களின் பாவனைக்காக கையளிப்பு

Published By: Gayathri

28 Oct, 2021 | 04:47 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில்  இராணுவ வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள இதுவரை இராணுவப்பயன்பாட்டில் உள்ள 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிலப்பிட்டிய உத்தியோகபூர்வமாக  மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் இன்றையதினம் (28) கையளித்துள்ளார்.

2009 க்கு முன்னர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்த காணி தவிர்ந்த ஏனைய  புதுக்குடியிருப்பு நகரத்துக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளே இன்றையதினம் விடுவிக்கப்ட்டுள்ளன. 

பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை இருந்த காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமே காணப்படுகின்றது.

தமக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாரிகோரி 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் காணி உரிமையாளர்களால் குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக ஏழு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக காணியில் இராணுவம் தொடர்சியாக நிலைகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியில் அமைந்திருந்த 682 ஆவது பிரிகேட் தலைமையகத்தை முல்லைத்தீவு பரந்தன் வீதியில் கைவேலி மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அரச காணி 75 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதியை சுவீகரித்து பெரும் எடுப்பில் இராணுவ முகாமை அமைத்து அங்கு மாற்றியமைத்த நிலையிலேயே தற்போது இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

682ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் மற்றும் காணிப்பகுதி அதிகாரிகள், கிராமசேவையாளர் மற்றும் 68 ஆவது படை அதிகாரிகள் ஆகியேர் கலந்துகொண்டுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08