அரச புலனாய்வு பணிப்பாளர் குறித்து போலியான தகவல் வழங்கியமைக்கே அருட்தந்தை சிறில் காமினி அழைப்பு - பொலிஸ்

Published By: Gayathri

28 Oct, 2021 | 05:11 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் தொடர்பில் போலியான தகவல்களை முன்வைத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அருட்தந்தை சிறில் காமினி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த 23 ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி மற்றும் அருட்தந்தை றொஹான் சில்வா உள்ளிட்ட கத்தோலிக்க மதத்தலைவர்களால் இணையவழி தொழில்நுட்பத்தினூடாக (Zoom)  வெளிநாடுகளிலுள்ள மக்களை தொடர்பு கொண்டு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் போலியான தகவல்களை முன்வைத்து, அவரது உயிருக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினால் கொழும்பு இல-1 நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்தும் இந்த விசாரணைகளுக்கான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று வியாழக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை அருட் தந்தை சிறில் காமினியினால் விசாரணைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக ஒரு வார கால அவகாசம் கேட்டு விடுக்கப்பட்டிருந்த எழுத்து மூல ஆவணத்தை அருட் தந்தையர்கள்  சிலர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43