இலங்கைக்கு பலாத்காரமாக உரத்தைக் கொடுக்க சீனாவுக்கு எந்த உரிமையுமில்லை - தயாசிறி

Published By: Digital Desk 4

27 Oct, 2021 | 10:39 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கைக்கு  பலாத்காரமாக  உரத்தை கொடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம்  கிடையாது.

இதற்கு சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை. குறித்த உரம் தாங்கிய கப்பலை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது மிகவும் தவறான செயலாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ரணிலின் குறி ஜனாதிபதி தேர்தல்,மாகாண சபை தேர்தல் அல்ல - தயாசிறி ஜயசேகர |  Virakesari.lk

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மற்றும்  தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான  நேர்முக பரீட்சை கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை (27 ) நடைபெற்றது.

இந்த நேர்முகப் பரீட்சையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, ஷான் விஜயலால் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரோஹன லக்சமன் பியதாச ஆகியோரினால் நடத்தப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்று  நடைபெறுகின்றது. 

விசேடமாக அதிகளவான தேர்தல் தொகுதிகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவர்களை  நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சையே நடைபெறுகிறது.

கட்சியை மேலும் ஸ்திரப்படுத்துவதற்கான நோக்கிலேயே நாம் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்கிறோம். கட்சியின் இளைஞர் அமைப்பு, மகளிர்  அமைப்பு,  ஆசிரியர்கள் அமைப்பு ஆகியவற்றை பலப்படுத்தியுள்ளோம்.

மேலும், எமது கட்சின் நிர்வாகிகள் கட்சியின் அமைப்பாளர்களை மாவட்ட ரீதியாக நேரடியாக சந்தித்து கட்சியை கட்டியெழுப்புவதற்குரிய பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.

எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தல்களின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளீர்களா என கேட்டதற்கு,

"நாம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. பல்வேறு வகையான பேச்சுவார்த்தைகள் வந்திருந்தன. எனினும், இதுவரை சரியானதொரு தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை.

தேர்தலொன்று நடத்தப்டும் போது அது தொடர்பில் நாம் தீர்மானம் எடுப்போம். இவ்விடயம் எமது கட்சியின் மத்திய செயற் குழுவிலும் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை" என்றார்.

பரிசோதனை நடத்தியதன் பின்னர் சீன நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட  உரக் கப்ப‍ல்  இலங்கைக்கு வருவது நிராகரிக்கப்பட்டது. எனினும்,  அந்த கப்பலிலுள்ள உரத்தை பரிசோதனை செய்வதற்காக மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று  வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இது குறித்து என்ன கூறுகிறீர்கள் என கேட்டதற்கு,

"இது முற்றாக தவறான செயலாகும். சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்நாட்டில்  தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக இந்த விவகாரம் நிராகரிக்கப்பட்டுள்ள  சூழ்நிலையே காணப்படுகிறது. இவ்வாறு பலாத்காரமாக இலங்கைக்கு உரத்தை வழங்குவதற்கு  எவருக்கும்  எந்த அவசியமும் இல்லையே.

ஆகவே, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக  இதில் அடங்கியுள்ள உள்ளீடுகள் தொடர்பில்  மிகப் பெரிய  எதிர்ப்பு காணப்படுகிறது.  இதனால், இதனை  பலாத்காரமாக இலங்கைக்கு கொண்டு வருதல் பெரும் தவறாகும். அத்துடன் மூன்றாம் தரப்பிடம் செல்வதும் பெரும் தவறாகும்.

இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், பரிசோத‍னை நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த உரத்தை  பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதிப்படுத்தபட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், மீண்டும் எப்படி  குறித்த கப்பலை  இலங்கைக்கு கொண்டு வர முடியும் என்பதே எங்களுக்குள்ள பிரச்சினையாகும். இவ்வாறு பலாத்காரமாக பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவது முறையற்றதாகும்.  

இந்த பிரச்சினைக்கு மாற்று வழியை தேட வேண்டும். அதைவிடுத்து, சீனாவிலுள்ள கழிவுகளை இங்கே கொண்டு வருவதை எதிர்க்கின்றோம். இதன் ஊடாக ஒரு சில பக்டீரியாக்கள் நாட்டுக்குள் வருவதன் ஊடாக நாட்டில் உயிரியல் ரீதியான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14