உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : பிரதான வழக்கை நெறிப்படுத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Published By: Digital Desk 4

27 Oct, 2021 | 10:37 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான பிரதான வழக்கினை நெறிப்படுத்தும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வாவுக்கு கூட,  குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின்  அறிக்கையில் பகிரங்கப்படுத்தப்படாத பகுதிகளை பார்வையிட அனுமதியில்லை என்பது வெளிப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : காத்தான்குடியில் கைதானவர்களின் விளக்கமறியல்  நீடிப்பு | Virakesari.lk

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  குற்றப் பகிர்வுப் பத்திரம்  மீதான வழக்கு  இன்று பரிசீலனைக்கு வந்த போதே இந் நிலைமை வெளிப்பட்டது.

பிரதிவாதிகளான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, புத்தளம்  அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோர் இன்று மன்றில் விஷேட  கோரிக்கை ஒன்றினை முன் வைத்திருந்தனர்.

அதாவது, வழக்கு விசாரணைகளுக்கு முன்னர் பிரதிவாதிகள் தரப்புக்கு தன் பக்க நியாயத்தை முன் வைக்க முறைப்பாட்டாளர் தரப்பு  கையளிக்க வேண்டிய  சான்று ஆவணங்கள் தொடர்பில் இதன்போது கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அது தொடர்பில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு  இதுவரை கையளிக்காத, எனினும் வழக்கு விசாரணைக்கு முன்னர் அவசியமானது என கூறும் சான்று ஆவணங்களின் பட்டியல் மன்றுக்கு பிரதிவாதிகள் சார்பில் முன் வைக்கப்பட்டது.

அதில் 11 ஆவது சான்று ஆவணமாக,  உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தின் சாட்சியாளர்கள் வாக்கு மூலம் அலித்திருப்பின் அதன் பிரதிகள் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டது.

இது தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்கும் போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான வழக்கை நெறிப்படுத்தும் தனக்கு கூட அவ்வாணைக் குழுவின் அறிக்கையின் இரகசிய இணைப்புக்களை பார்வை இட முடியாத நிலை காணப்படுவதாக  தெரிவித்தார்.

'  உயிர்த்த ஞாயிறு தின ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையின் இணைப்புகள் பிரதிவாதிகளால் கோரப்பட்டுள்ளன.

உண்மையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை எனக் கூறி பகிரங்கப்படுத்தப்ப்ட்ட அறிக்கையை மட்டுமே நானும் அறிவேன்.

 ஏனைய இரகசிய இணைப்புக்கள் அடங்கிய அறிக்கைகள் சட்ட மா அதிபருக்கு கையளிக்கப்பட்ட போதும், அது நிபந்தனைகளின் அடிப்படையிலேயே சட்ட மா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

 ஆணைக் குழுவில் சாட்சியமளித்தவர்களின் சட்டத்தரணிகளுக்கு கூட அவர்களது சாட்சியத்தின் தொகுப்பை பெற முடியுமாக இருந்ததா என தெரியவில்லை.

எனவே கோரப்படும் குறித்த பிரதிகளை உடனடியாக வழங்க முடியாது. அது தொடர்பில் ஆணைக் குழு அறிக்கைக்கு பொறுப்பாக இருக்கும் சட்டவாதியிடம் கலந்தாலோசித்தே என்னால் எதுவும் கூற முடியும்.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா கூறினார்.

 இதன்போது வழக்கை விசாரிக்கும் நீதிபதி குமாரி அபேரத்ன, குறித்த அறிக்கையின் பகுதிகளை நீங்கள் இவ்வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக சாட்சியமாக பயன்படுத்த  உத்தேசம் உள்ளதா என வினவினார்.

 அதற்கு பதிலளித்த  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, இல்லை என பதிலளித்தார். எனினும் பிரதிவாதி ஹிஜாஸ் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி நலின் இந்ரதிஸ்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு, இவ்வழக்கின் சாட்சியாளர்கள் எவரேனும் வாக்கு மூலம் வழங்கியிருப்பின் அது இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பு நியாயத்தை முன் வைக்க முக்கிய சான்றாக அமையும் எனவும் அதனால் அவை தமக்கு வழங்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 இதனையடுத்து திறந்த மன்றில் மீளவும் கருத்து முன் வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா,

' உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பிரதான வழக்கை நெறிப்படுத்தும் அரச சட்டவாதி நான். எனக்கு கூட குறித்த அறிக்கையின் மறைக்கப்பட்ட அல்லது இரகசிய இணைப்புக் கோவைகளை பார்வையிட அனுமதியில்லை.

எனவே இந்த விடயத்தில் என்னால் உடனடி பதிலை வழங்க முடியாது. ஆணைக் குழு அறிக்கைக்கு பொறுப்பான சட்டவாதியுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்த தவணையில் பதிலளிக்கிறேன். என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51