மகுடி மன்னன் என்றழைக்கப்படும் இலங்கை நாட்டு சொல்லிசை கலைஞனான ஆரியன் தினேஸ் கனகரட்னம் மற்றும் ஸ்ரீ ராஸ்கோலும் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘அச்சம் என்பது மடைமையடா’ திரைப்படத்திற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் ‘அச்சம் என்பது மடைமையடா’ என்ற இசைக்காணொளி ஒன்றினை வெளியிடவுள்ளனர்.

ADK SRI RASCOL’ எனும் குறியீட்டு பெயரில் ‘RAP MACHINES ’ எனும் இசைக்குழுவினை அமைத்து இருவரும் இணைந்து வெளியிடும் முதல் பாடலாக இது அமைந்துள்ளது. 

இப்பாடல் காட்சிகள் முழுவதும் மலேசியாவில் ஓளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கென முற்றிலும் புதிய திரையமைப்புகள் அமைக்கப்பட்டும் அதிக பொருட்செலவில் பலரது உழைப்பின் பயனாக இப்பாடல் சிறப்பாக உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏதிர்வரும் 23 ஆம் திகதி ‘YOUTUBE’ அலைவரிசை மற்றும் சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் இப்பாடல் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.