'வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் திறமைகள் மங்கிப்போகலாம்'... ஸ்ரீமதி அனுஷா மொறாயஸ்

Published By: Digital Desk 2

26 Oct, 2021 | 05:29 PM
image

எனது கலைத்துறையின் ஈடுபாட்டை எனது பெற்றோர் கண்டறிந்து அவர்களின் விடாமுயற்சியின் ஊடாக அதற்கான சரியான பயிற்சிகளை பெற உதவினார்கள். அவர்களின் விடா முயற்சியும் எனது குருவான கலாசூரி கெளரீஸ்வரி ராஜப்பன் அவர்களின் மூலம் நான் பெற்ற பயிற்சியும் இன்று நான் கலைத்துறையில் இவ்வளவு தூரம் பிரகாசிக்க காரணமாக இருக்கின்றது என்று சங்கீத கலா வித்தகர், கலைச் சுடர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பாளர் ஸ்ரீ மதி அனுஷா மொறாயஸ் தெரிவித்தார். 

வீரகேசரியில் சங்கமம் பகுதிக்கு  செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஒருவருக்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். வாய்ப்புக்கள் வந்தால் மட்டுமே ஒருவரின் திறமையை எங்களால் வெளிக்கொண்டுவர முடியும். வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் திறமைகள் மங்கிப் போகலாம்.

எத்தனையோ பேர் வாய்ப்புக்கள் இல்லாமல் பல்வேறு நல்ல திறமைகளுடன் இருக்கின்றார்கள். இந்நிலையில் எனக்கும் என் அன்னைக்கும் கிடைத்த வாய்ப்பினால் தான் நன் இன்று இவ்வாறு மிளிர்கின்றேன் என்றும் வீரகேசரியில் சங்கமம் செவ்வியில் தெரிவித்தார். 

இதே போல் தனது கலைத்துறை அனுபவங்களையும் பல்வேறு சுவாரஷ்யமான விடயங்களையும் குறித்த செவ்வியில் எங்களுடன்  பகிர்ந்து கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right