நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Published By: Gayathri

26 Oct, 2021 | 01:30 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஐஸ், ஹேரோயின், குஷ் மற்றும் ஏஷ் உள்ளிட்ட வெவ்வேறு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கம பொலிஸ் பிரிவில் சுதுவெல்ல பிரதேசத்தில் 6 கிராம் ஐஸ் போதைப்பொருடன் 20 வயதுடைய சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா பொலிஸ் பிரிவில் ஹம்புட்டான பிரதேசத்தில் தலங்கம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 கிராம் ஏஷ் என்ற போதைப்பொருள் மற்றும் 5 கிராம் குஷ் போதைப்பொருள் என்பவற்றுடன்  சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்னேரியா பொலிஸ் பிரிவில் படுஓய பாலத்திற்கருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 200 மில்லி கிராம் ஹேரோயினுடன் 31 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தில் 2 கிராம் 150 மில்லிகிராம் ஹேரோயினுடன் 26 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22