கிளிநொச்சியில் பயிர்கள் அழிவு : இழப்பீடு கோரும் விவசாயிகள்

Published By: Gayathri

26 Oct, 2021 | 12:44 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தின் போது ஏற்பட்ட பயிரழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 

அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்க முடியும் என   கமநல  மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக 1025 ஏக்கர் நெற்செய்கை 400 ஏக்கர் வரையான வயற் பயிர்கள் 150 ஏக்கர் வரையான பழ பயிர்கள் 82 ஏக்கர் வரையான மரக்கறி செய்கைகள் என்பன அழிவடைந்துள்ளன.

இந்தநிலையில் இவற்றுக்கான இழப்பீட்டுக்  கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் தங்களுக்கான இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த பெரும் போகத்தின்போது ஏற்பட்ட அழிவுகளுக்கான இழப்பீடுகள்  நாடளாவிய ரீதியில் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

அதற்கான நிதி கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மேற்படி இழப்பீடுகளை வழங்க முடியுமென காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26