கடந்த 67 நாட்களில் ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம்

Published By: Vishnu

26 Oct, 2021 | 08:26 AM
image

கடந்த 67 நாட்களில் ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழமையாக ஒரு நாளில் ரயில்வே திணைக்களத்திற்கு 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கான வருமானம் 500 மில்லியனைத் தாண்டும்.

எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கடந்த 67 தினங்களாக தற்காலிகமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில்வே திணைக்களத்திற்கு அதனால் பெருமளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளது. 

இதேவ‍ேளை நேற்றைய தினம் முதல் மாகாண மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்களுக்கு செல்வோர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டுள்ள பிரவேச பத்திரத்தை உபயோகித்து ரயில்களில் பயணம் செய்ய முடியும்.

அதற்கிணங்க 130 ரயில் சேவைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38